பட்ஜெட் வாசிப்பின் போது குறுக்கீடு செய்து அடாவடி செய்த துரைமுருகன்! சபாநாயகர் தடுத்ததால் வெளிநடப்பு!
பட்ஜெட் வாசிப்பின் போது குறுக்கீடு செய்து அடாவடி செய்த துரைமுருகன்! சபாநாயகர் தடுத்ததால் வெளிநடப்பு!

By : Mohan Raj
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நேற்று நடந்தது அப்பொழுது குறுக்கிட முயன்ற எம்.எல்.ஏவும், தி.மு.க பொதுச்செயலாளருமான துரைமுருகனை சபாநாயகர் தடுத்ததால் தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்பொழுது கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வரவில்லை ஆனால் தி.மு.க'வின் இதர எம்.எல்.ஏ'க்கள் வந்திருந்தனர்.
இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க துவங்கிய போது அ.தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து சில கருத்துக்களை பேச முயற்சித்தார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. துணை முதலமைச்சரை பட்ஜெட் வாசிக்க அனுமதி அளித்துவிட்டேன். எனவே இப்போது உங்களை பேச அனுமதிக்க இயலாது என்று துரைமுருகனை பார்த்து சபாநாயகர் கூறினார்.
ஆனாலும் சபாநாயகர் பேச்சை பொருட்படுத்தாது மீண்டும் துரைமுருகன் அ.தி.மு.க அரசை பற்றி சில கருத்துக்களை பேச தொடங்கினார். ஆனால், அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்த சமயத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தொடரை தொடர்ந்து வாசித்தார். இதனால், தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளியில் வந்து, "தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நிதிநிலை மேலாண்மை சரிசெய்யப்படும். தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை கொடுப்போம். தமிழக அரசு ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது. வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெறும். தமிழக தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
