குளிர்கால கூட்டத் தொடர், நாளை மறுதினம் துவங்க உள்ளதை அடுத்து! அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அழைப்பு!
குளிர்கால கூட்டத் தொடர், நாளை மறுதினம் துவங்க உள்ளதை அடுத்து! அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அழைப்பு!
By : Kathir Webdesk
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல் கூட்டம், கடந்த ஜுன் மாதம் நடந்து முடிந்தது.மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அதன் முதல் அமர்வில், பாராளுமன்றம் 370 வது பிரிவை ரத்து செய்தல், ஜம்மு-காஷ்மீரின் மறுசீரமைப்பு, டிரிபிள் தலாக் மசோதா, புதிய மோட்டார் வாகன திருத்த மசோதா போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், அதிகபட்ச மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட சாதனையையும் உருவாக்கியது.
கடந்த 67ஆண்டுகளில் இந்நிலையில், இரண்டாவது கூட்டத் தொடர், நாளை மறுநாள் துவங்கி, டிசம்பர், 13 வரை நடக்கிறது.இந்த குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று அழைப்பு விடுத்து உள்ளார்.இந்த கூட்டத்தொடரில் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 27 புதிய மசோதாக்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.