அரசியல் பேசணும்னா சொந்த பணத்தில் செய்தியாளர் சந்திப்பு வைத்து சொல்லுங்கள் ! விஜயை கிழித்த தயாரிப்பாளர் !
அரசியல் பேசணும்னா சொந்த பணத்தில் செய்தியாளர் சந்திப்பு வைத்து சொல்லுங்கள் ! விஜயை கிழித்த தயாரிப்பாளர் !
By : Kathir Webdesk
கடந்த வாரம் பிகில் பட பாடல் வெளீயீடு விழா நடந்தது இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 10000 பேர் உட்காரும் அரங்கிற்கு 20000 ஆயிரம் டிக்கெட் விற்று கூட்டத்தை காட்டியுள்ளனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் தான் கூட்டம் வந்தது.
கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர், பல ரசிகர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஆறுதல் கூட சொல்லாத விஜய் கம்முனு உம்முனு ஜம்முனு வெளிநாட்டிற்கு ஓய்வு எடுக்க போய்விட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் அரசியல் குறித்து பேசினார். அதற்கு கண்டங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தயாரிப்பாளர்கள் பணத்தில் நடிக்கின்ற சினிமா ஹீரோக்கள் தயாரிப்பாளர் செலவில் நடக்கும் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசும் போது அவர்களின் அரசியல் ஆசையை பேசி வருகின்றனர், சமீபத்தில் பிகில் சினிமா ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆளும் அரசை குறை கூறி கைதட்டல்கள் பெற்றார். இதனால் ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களுக்கும் பல சிக்கல் ஏற்படுகிறது என தயாரிப்பாளர் ராஜன் குற்றம் சாட்டினார்.
இது குறித்து தயாரிப்பாளர் பேசுகையில் ,தயாரிப்பாளர்களிடம் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு நடிப்பவர்கள் நடிகர்கள். அவர்களின் அரசியல் ஆசையை தனியாக செய்தியாளர் சந்திப்பு வைத்து தெரிவிக்க வேண்டும், அதை விடுத்து தயாரிப்பாளர் பணத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டு விழாவில் கருத்தை தெரிவிப்பது சரியான முறையில் இருக்காது என தெரிவித்தார்.