இத்தாலியில் சிக்கித் தவித்த 211 இந்திய மாணவர்களையும் அதிரடியாக மீட்ட இந்தியா - வியக்கும் உலக நாடுகள்!
இத்தாலியில் சிக்கித் தவித்த 211 இந்திய மாணவர்களையும் அதிரடியாக மீட்ட இந்தியா - வியக்கும் உலக நாடுகள்!
கொரோனா வைரஸ் உலக முழுதும் பரவி வரும் நிலையில் பல நாடுகளில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலியில் சிக்கித் தவித்த 211 இந்திய மாணவர்களை மீட்க சென்ற சிறப்பு ஏர் இந்தியா விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது.
இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உதவிய அனைவருக்கும், குறிப்பாக ஏர் இந்தியா குழு மற்றும் இத்தாலிய அதிகாரிகளுக்கு சிறப்பு நன்றி என்று மிலனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரசை தொற்றுநோயாக அறிவித்து, மேலும் ஐரோப்பா தற்போது கொரோனா வைரஸ் பரவளின் மையமாக திகழ்கின்றது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததில் இருந்து இத்தாலியில் தனது மக்களை வெளியேற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸால் 175 இறப்புகளைப் பதிவுசெய்தது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது. ஏர் இந்தியா கூட ஏப்ரல் 30 வரை இத்தாலிக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்திருந்தது.
கடந்த சில வாரங்களில் இந்தியா பல நாடுகளில் இருந்து தனது மக்கள் வெளியேற்றி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனா, ஜப்பான் மற்றும் ஈரானில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்றி வருகின்றது இந்தியா.