Kathir News
Begin typing your search above and press return to search.

வேளாங்கண்ணி திருவிழாவில் விற்கப்படும் கெட்டுபோன உணவுபொருள்கள் - பறிமுதல் செய்த அதிகாரிகள்

10 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருள்கள் வேளாங்கண்ணியில் பறிமுதல் செய்யப்பட்டது உரிமையாளருக்கு 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி திருவிழாவில் விற்கப்படும் கெட்டுபோன உணவுபொருள்கள் - பறிமுதல் செய்த அதிகாரிகள்

KarthigaBy : Karthiga

  |  24 Aug 2022 9:30 AM GMT

வெளிப்பாளையம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா வருகிற 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள். இதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாகை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு உணவகங்கள் மற்றும் கடைகளில் ஆய்வு செய்தனர்.


இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கெட்டுப் போன பழவகைகள் ஜூஸ் போடுவதற்காக தயார் நிலையில் இருந்த 20 கிலோ பழங்கள் டீக்கடைகளில் வைத்திருந்த இரண்டு கிலோ கலப்பட டீத்தூள் என மொத்தம் 10 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News