இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு; முஸ்லிம்கள் புறக்கணிப்பு!
இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு; முஸ்லிம்கள் புறக்கணிப்பு!
By : Kathir Webdesk
இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்று கொண்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி தமிழரான ஆறுமுக தொண்டைமானும், வட மாகாணத்தை சேர்ந்த தமிழரான டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆறுமுக தொண்டமானுக்கு சமூக வலுவூட்டல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் இந்த புதிய அமைச்சரவையில் இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் ஒருவருக்குக்கூட பதவி வழங்கப்படவில்லை. இதற்கு முன்பு இலங்கையில் அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை முஸ்லிம்களை ராஜபக்சே புறக்கணித்துள்ளார். இது இலங்கை உள்ள முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.