Kathir News
Begin typing your search above and press return to search.

பெட்ரோல் வாங்க பணம் இல்லை: இந்தியாவிடம் ரூ.3750 கோடி கடன் கேட்கும் இலங்கை!

கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு ரூ.3,750 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை வைத்துள்ளது.

பெட்ரோல் வாங்க பணம் இல்லை: இந்தியாவிடம் ரூ.3750 கோடி கடன் கேட்கும் இலங்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Oct 2021 7:59 AM GMT

கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு ரூ.3,750 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா தொற்றால் இலங்கை அன்னிய செலாவணி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக எரிபொருள் கொள்முதல் செய்வதற்கு கூட பணம் இல்லாமல் அவதியுறும் நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், சிங்கப்பூரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை இலங்கை இறக்குமதி செய்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த காரணத்தினால் இறக்குமதிக்கு கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் கடும் நெருக்கடிக்கு உள்ளான இலங்கை கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய பணம் இல்லாமல் தவித்து வருகிறது. இதனிடையே எரிபொருள் கொள்முதல் செய்யும் அந்நாட்டில் சிபிசி எனப்படும் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், மற்றும் சிலோன் வங்கி மக்கள் வங்கியில் நிலுவை தொகை வைத்துள்ளது.

இது பற்றி சிபிசி தலைவர் சுமித் விஜிஷிங்கே கூறும்போது: இந்தியா இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்படி ரூ.3,750 கோடி கடன் கேட்பது தொடர்பாக இங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். அந்த பணம் கிடைத்த பின்னர் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source,Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News