கச்சத்தீவை இந்தியாவுக்கு நீண்டகாலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு முயற்சி - கொந்தளிக்கும் இலங்கை மீனவர்கள்
By : Thangavelu
இலங்கை வடபகுதி மீனவர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவு கடல் பிராத்தியத்தை இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதை காரணம் காட்டி இந்தியாவுக்கு மிக நீண்டகாலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மீவவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து இலங்கை நாட்டில் உள்ள மன்னார் மாவட்டத்தில் மீனவர் சங்க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அந்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஆலம் பேசியதாவது: கச்சத்தீவுப் பகுதி இந்தியாவுக்கு மிக நீண்டகால குத்தகைக்கு விடுவதாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாக மீனவர்கள் அறிந்து கொண்டோம். இதன் உண்மைத் தன்மை குறித்து மீனவர் சங்கத்தின் தலைவர்களாக இருக்கின்றோம் எங்களுக்கே இன்னும் தெரியவில்லை.
இருந்தபோதிலும் இந்திய தரப்பினரால் தொடர்ச்சியாக கச்சத்தீவுப் பகுதி இந்திய மீனவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும் என்கின்ற கருத்தை அவர்கள் முன்வைத்து வருகின்றனர். தற்போதைய சூழலில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் இந்தியாவுக்கு கச்சத்தீவை சுமார் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கை வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். விரைவில் இலங்கை நாடும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு ஏராளாமான வாய்ப்பு இருக்கிறது. எனவே கச்சத்தீவு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source, Image Courtesy: Vikatan