உதயநிதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீரெட்டி
உதயநிதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீரெட்டி
By : Kathir Webdesk
திரைத்துறையில் வாய்ப்புக்காக பாலியல் தொடர்பான இன்னல்களுக்கு நடிகைகள், பாடகிகள் உள்ளாகின்றனர் என்ற சர்ச்சை #Metoo மூலம் சமீபகாலத்தில் வெளிவருகின்றன. பாடகி சின்மயி-கவிஞர் வைரமுத்து சர்ச்சை முதல் நடிகை ஸ்ரீ ரெட்டி வரை சர்ச்சை பெரியளவில் வெடிக்கின்றன.
நடிகை ஸ்ரீ ரெட்டி, வாய்ப்பு கொடுப்பதாக கூறி பல நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு வாய்ப்புகள் கொடுக்காமல் விட்டுவிடுகின்றனர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். நடிகர் பிரசாந்த், ராகவ லாரென்ஸ், ஏ. ஆர். முருகதாஸ், உதயநிதி போன்றோர் மீது குற்றம் சாட்டினார். ஆனால் அவர் தன்னை பிரபல படுத்திக்கொள்ள இப்படி செய்கிறார் என்று கூறப்பட்டது.
சில தினங்கள் முன்பு, ஸ்ரீ ரெட்டி பெயரிலுள்ள முகநூல் பக்கத்தில் படவாய்ப்பு தருவதாக உதயநிதி ஸ்டாலின் ஒரு இரவு முழுவதும் ரெய்டு விட்டு, பின் கைவிட்டதாகவும், இது குறித்து செய்தியாளர்களை கூடிய விரைவில் சந்திக்க இருப்பதாக பதிவிடப்பட்டிருந்தது. மற்ற செய்தி தளங்களை போல, கதிர் செய்திகள் தளத்திலும் இந்த செய்தியை பதிவிட்டிருந்தோம்
இந்நிலையில், உதயநிதிக்கு தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அந்த முகநூல் பக்கம் என்னுடையது அல்ல என்று கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.