ஸ்ருதிஹாசனின் ஹாலிவுட் திரைப்படம் நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகிறது!
ஸ்ருதிஹாசனின் ஹாலிவுட் திரைப்படம் நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகிறது!
By : Kathir Webdesk
நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. தற்போது அவர் விஜய்சேதுபதியுடன் ‘லாபம்’ படத்திலும் மற்றும் பாலிவுட் படமான ‘பவர்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் டிம் கின் என்பவர் இயக்கவுள்ள அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். இந்த தொடரில் ஜெர்மி இர்வின், பிரையன் ஸ்மித், ஒமர் மெட்வால்லி உள்பட முன்னணி அமெரிக்க தொலைக்காட்சி பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.
தற்போது ஹாலிவுட்டில் வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் பிரமாண்டமான படம் ‘Frozen II'. இந்த படம் தமிழ் உள்பட உலகின் பல மொழிகளில் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் ‘Frozen II'படத்தின் முக்கிய கதாபாத்திரம் ‘எல்சா’ அந்த கேரக்டரில் பிரபல நடிகை Idina Menzel' நடித்துள்ளார். ‘எல்சா’ கேரக்டருக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த செய்தியை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ இந்தியாவின் சமூக வளையதளத்தில் உறுதி செய்துள்ளது.