Kathir News
Begin typing your search above and press return to search.

குலசேகரபட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் - தமிழ்நாட்டை மேம்படுத்தும் மத்திய அரசு!

தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்.

குலசேகரபட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் - தமிழ்நாட்டை மேம்படுத்தும் மத்திய அரசு!
X

KarthigaBy : Karthiga

  |  12 Feb 2023 2:15 AM

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ். எல்.வி டி - 2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது :-


இஸ்ரோ குழுவில் தற்போது புதிய ரக ராக்கெட்டை இணைத்துள்ளோம். இதன் மூலம் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தி உள்ளோம் . இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் எஸ்.எஸ்.எல்.வி டி-1 ராக்கெட்டில் ஏற்பட்ட குறைபாடுகளை கண்டறிந்து வெகு விரைவாக டி-2 ராக்கெட்டை தயாரித்து செலுத்தி உள்ளோம். இப்போதைக்கு எஸ்.எஸ்.எல். வி ரக ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட் ஏவப்படும். வரும் மார்ச் இரண்டாவது வாரத்துக்கு மேல் இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒன் வெப் நிறுவனத்திற்கு சொந்தமான 36 செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 எல்.எம்.வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளன. அதேபோல் மார்ச் இறுதியில் பி.எஸ்.எல். வி ராக்கெட் ஏவப்படவிருக்கிறது.

மீண்டும் உபயோகிக்க கூடிய ராக்கெட்டுக்கான பரிசோதனையை சித்திர துர்கா மையத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறோம். மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் சுகன்யா திட்டம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது . குறிப்பாக கடலில் வீரர்களை பத்திரமாக இறக்குவது பற்றிய பரிசோதனை நடந்து வருகிறது . இந்த ஆண்டு மற்றொரு ராக்கெட்டை ஏவ இருக்கிறோம். குறிப்பாக ஆளில்லா ராக்கெட்டையும் விண்ணில் ஏவ உள்ளோம். அதே போல் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா அமெரிக்காவின் கூட்டுத்திட்டமான நிசார் செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட் மூலம் ஏவுகிறோம். இது தவிர பல. பி.எஸ். எல்.வி ராக்கெட்டுகளும் இந்த ஆண்டு ஏவப்பட உள்ளன. ஆசாதி சாட் செயற்கைக்கோளை வடிவமைத்து வெற்றிகரமாக உருவாக்கிய இளம் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். இவ்வாறு அவர் பேசினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News