ஸ்டாலினை வச்சு செய்த பா.ஜ.க ஐ.டி விங்! விளக்கம் அளித்த CTR நிர்மல்குமார்.!
ஸ்டாலினை வச்சு செய்த பா.ஜ.க ஐ.டி விங்! விளக்கம் அளித்த CTR நிர்மல்குமார்.!
By : Kathir Webdesk
பாரதிய ஜனதா கட்சியின் டுவிட்டரில் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் வெளியிட்டது இன்று ஸ்டாலினும், திராவிடர் கழகத்தினரும் ஏதோ பாஜக உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்புவதாக கூறுகின்றனர்.
உண்மையில் திருவள்ளுவர் ஒரு ஹிந்துவே அவர் தனது குறல்கள் பலவற்றில் ஹிந்து தெய்வங்கள் பற்றியும் இந்துத்துவத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்றை திட்டமிட்டு கருணாநிதி தலைமையிலான திமுகவினரால் அழிக்கப்பட்டன அதை இன்று பாஜக வெளியிடுவதால் திமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்த விஷயத்தை தேவையில்லாமல் ஸ்டாலின் மற்றும் திகவினர் எந்த ஆதாரமும் இல்லாமல் கையிலெடுத்து, பின்னர் காஷ்மீர் விஷயத்தைப் போல் பின்வாங்க போகின்றனர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் எங்களிடம் திருவள்ளுவர் ஒரு ஹிந்துவே என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன இனிமேலும் திமுகவினர் இந்துக்களையும் தமிழர்களையும் ஏமாற்ற முடியாது.
ஒரு வரிகூட துண்டுச்சீட்டு இல்லாமல் தமிழில் படிக்க கூட தெரியாது ஸ்டாலின் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் வக்காலத்து வாங்க எந்த அருகதையும் கிடையாது.
ஸ்டாலினும் அவர் சார்ந்த கட்சிகளும் இதுவரை தமிழ் வளர்ப்புக்காக எதுவுமே செய்ததில்லை.
திருவள்ளுவருக்கு உலக அரங்கில் பெரும் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பிரதமர் மோடி தான் ஏற்படுத்தி வருகிறார்.
- CTR நிர்மல்குமார் ஐ.டி விங் அமைப்பாளர் பா.ஜ.க