Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சியில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை முத்திரைத்தாள் விலை ஏற்றம் - அண்ணாமலை!

10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள முத்திரைத்தாள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க ஆட்சியில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை முத்திரைத்தாள் விலை ஏற்றம் - அண்ணாமலை!

KarthigaBy : Karthiga

  |  19 April 2023 1:30 PM GMT

தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக விலை ஏற்றம் ஒன்று மட்டும் மூன்று மாத இடைவெளியில் பரிசாக வழங்கப்படுகிறது. சொத்துவரி உயர்வு, குடிநீர் வடி உயர்வு , பால் விலை உயர்வு , மின் கட்டண உயர்வைத் தொடர்ந்து நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதமும் முத்திரைத்தாள் கட்டணத்தை 10 மடங்கும் உயர்த்தி உள்ளது. தி.மு.க அரசு திமுகவினர் அவர்களது உற்றார் மற்றும் உறவினர்கள் நடத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தை விலையை பல மடங்கு கூட்டி சாமானிய மனிதர்கள் வீட்டுமனை வாங்கும் திட்டத்தை கைவிடும் படி செய்துள்ளனர் .


இது போதாது என்று தற்போது இருக்கும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியுள்ளனர். முப்பதாம் தேதி பதிவுத் துறை தலைவர் அனுப்பிய சுற்றறிக்கை படி தமிழக முழுவதும் நிர்ணயிக்கப்பட வேண்டிய நிலத்தின் வழிகாட்டி மதிப்பை கண்டறிய ஒரு குழு அமைத்ததாகவும் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க தாமதமாவதால் 2017 ஆம் ஆண்டு குறிக்கப்பட்ட சதவீத மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தற்போது உள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பை விட 33 சதவீதம் உயர்த்தி உள்ளது சந்தேகங்களை எழுப்புகிறது .


அரசு நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்பை விட சந்தை விலை குறைந்தபட்சம் 50% அதிகமாகவே தமிழகம் முழுவதும் காணப்படுகிறது . தற்போது உயர்த்தப்பட்ட 33 சதவீத வழிகாட்டி மதிப்பினால் சந்தை விலை மேலும் கூடி சாமானிய மனிதர்கள் நிலம் வீட்டுமனை அல்லது வீடு வாங்கும் திட்டத்தை முழுவதுமாக முடக்கிவிடும். 2022 - 23 நிதி ஆண்டில் பத்திரப்பதிவுத்துறை ஈட்டிய மொத்த வருவாய் ரூபாய் 17,297 கோடி அதற்கு முந்தைய ஆடை விட 24.3% அதிகம்.


இவ்வாறு இருக்கும் போது முத்திரைத்தாள் கட்டணத்தையும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பையும் எதற்காக பன்மடங்கு உயர்த்த வேண்டும்? அரசின் திட்டங்களை செயல்படுத்த கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மட்டும் இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வு சென்றால் நிலத்தை எழுந்த மக்கள் பயன் அடைவார்கள் ஆனால் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் ஒதுக்கப்பட்ட பரந்தூர் விமான நிலையத்துக்கு உட்பட்ட மற்றும் சுற்றியுள்ள நிலங்களை சமீப காலமாக பலர் வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது .


நிலத்தின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் கூட்டியதால் சமீபத்தில் நிலம் வாங்கியோர் பலகோடி லாபம் அடைவார்கள். இதில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும். நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வு தமிழக முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் இனி சந்தை விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளதால் அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மட்டுமே இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்ட 10 மடங்கு முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News