ஆயுதங்களில் இருந்து விலகியே இருங்கள் - காஷ்மீர் மாணவர்களுக்கு, ராணுவம் அறிவுரை!!
ஆயுதங்களில் இருந்து விலகியே இருங்கள் - காஷ்மீர் மாணவர்களுக்கு, ராணுவம் அறிவுரை!!
By : Kathir Webdesk
காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட 15 வயது நிரம்பிய சிறுவர்களைக் குறிவைத்து பிரிவினைவாத சக்திகள் மூளைச் சலவை செய்வதைத் தடுக்கும் நோக்கில் “ஆப்பரேஷன் சாத்பவனா” என்ற சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள், நாடு முழுவதும் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். நாட்டில் பரந்து விரிந்து கிடக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“சாத்பவனா சுற்றுலா” நிறைவு விழா நிகழ்ச்சியில் ராணுவ கமாண்டர் கே.ஜே.எஸ். திலான் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களே, நீங்கள் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தீர்கள். இது தேசத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கிறார்கள்? நாட்டின் பிற பகுதிகளில் தொழில் எப்படி நடைபெறுகிறது? என்பதைத் தெரிந்து கொள்வதற்கான நல் வாட்ப்ப்பாக உங்களுக்கு அமைந்தது.
உங்கள் அனைவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். போதை வஸ்துக்கள், ஆயுதங்களில் இருந்து விலகியே இருங்கள். உங்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.
நீங்கள் இந்தப் பயணத்தின் மூலம் கண்ட மாற்றங்களை காஷ்மீரிலும் ஏற்படுத்த விரும்புவீர்கள் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.