Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தரகாண்டில் புதையும் நகரம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை-முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு

புதையும் ஜோஷிமத் நகரம் நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதயொட்டி உத்தரகாண்ட் முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக பேசினார்.

உத்தரகாண்டில் புதையும் நகரம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை-முதல் மந்திரியுடன் பிரதமர் மோடி பேச்சு

KarthigaBy : Karthiga

  |  9 Jan 2023 8:45 AM GMT

இயற்கை எழில் கொஞ்சும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான ஜோஷிமத், பூலோக சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு மிகுந்த நகரத்துக்கு பெரும் சோதனை வந்திருக்கிறது.இந்த நகரம் நில வெடிப்புகளாலும், நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 4,500 கட்டிடங்களில் 61 கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு அவை வாழ தகுதியற்றவையாக மாறி இருக்கின்றன. அந்த கட்டிடங்களில் வாழ்கிறவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். சங்கராச்சாரியார் மடத்திலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நகரம் புதைந்து கொண்டிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இதன் காரணமாக 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இன்னும் குறைந்தது 90 குடும்பங்கள் வெளியேற்றப்பட இருக்கின்றன. நான்கு அல்லது ஐந்து இடங்களில் நிவாரண மையங்களை உள்ளூர் நிர்வாகம் ஏற்படுத்தி இருக்கிறது. ஜோஷிமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். இதற்கிடையே ஜோஷி மத்தை ஹைதராபாத் தேசிய ரிமோட் சென்சிங் சென்டர் மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை புகைப்படங்களுடன் சமர்ப்பிக்குமாறு உத்தரகாண்ட் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜோஷிமத் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே மிஷ்ரா, மதிய மந்திரி சபை செயலாளர் ராஜீவ் கவுபா,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஜோஷிமத் மாவட்ட அதிகாரிகளும் காணொளி காட்சி வழியாக பங்கேற்றினர். உத்தரகாண்ட் அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்ள தவறவில்லை. இந்தக் கூட்டத்தில் ஜோஷிமத்தில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமியை பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு அவர்களை மறு குடியமர்வு செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விசாரித்து அறிந்தார். இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜோஷிமத்தின் நிலைமையை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News