சாய் பல்லவி நடிக்கும் படத்தில் அயோத்யா - பாபர் மசூதி குறித்த கதையால் கிளம்பிய சர்ச்சை.!
சாய் பல்லவி நடிக்கும் படத்தில் அயோத்யா - பாபர் மசூதி குறித்த கதையால் கிளம்பிய சர்ச்சை.!
By : Kathir Webdesk
பிரேமம் படத்தில் அறிமுகமாகி நல்ல கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவர்ந்தார் சாய்பல்லவி. மேலும் தமிழ் சினிமாவில் தனுஷ் உடன் மாரி-2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992 என்ற திரைப்படத்திலும் மற்றும் நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த விரத பர்வம் 1992 படத்தில் ராணா போலீஸ் கதாபாத்திரத்திலும் , சாய் பல்லவி நாட்டுப்புற பாடகராக இருந்து நக்சலைட்டாக மாறும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் .
பொதுவாக நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகிகள் பல முறை சிந்திப்பார்கள். ஆனால் சாய்பல்லவி கதையைக் கேட்டதும் சம்மதித்துவிட்டார். மேலும் வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு போன்ற பிரச்னைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது என தகவல்.
இந்த தகவல் வெளியாகி இந்த படத்தை பற்றி கருத்துகள் சமூகவளையத்தில் பரபரப்பை ஓடியது.
மேலும் பல அமைப்பினர் படத்தை காண்பித்த பிறகு தான் வெளியிடனும் எனவும் எதிர்பை காட்டியுள்ளனர், மேலும் சில அமைப்பினர் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
அயோத்யா - பாபர் மசூதி பற்றிய தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள தருணத்தில், இது குறித்த காட்சிகள் அமைப்பதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.