இந்திய கொடியும், 'பாரத் மாதா கி ஜே' கோஷமும் எங்கள் உயிரை காப்பாற்றுகிறது: பாகிஸ்தானியர்கள் பெருமிதம்!
By : Thangavelu
உக்ரைன் மீது ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலால் அங்கிருந்து தப்பிப்பதற்காக இந்திய தேசிய கொடியையும், பாரத் மாதா கி ஜே என்ற கோஷங்களையும் பாகிஸ்தான் மாணவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
உக்ரைன் மீது கடந்த 7வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உயிரை காப்பாற்றிக்கொள்ள இந்தியர்கள் உட்பட பாகிஸ்தானியர்கள் பதுங்கு குழிகளில் பதுங்கியுள்ளனர். அது போன்றவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் கட்டாயம் தேசியக்கொடியை கையில் பிடித்தும், வாகனங்களில் முன்புறம் கட்டியும் வரவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை இந்திய மாணவர்கள் கடைப்பிடித்து வந்தனர். இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகள் அவர்கள் மீது தாக்குதலை நடத்துவதில்லை.
Pakistani student using indian flag to come out of ukraine... Thats power of our india and Modiji... Watch till the end.#indianstudentsinukraine #nuclearwar pic.twitter.com/dBVp4Dj4xe
— Jay (@PoojaraJaydeep) February 28, 2022
அதே பாணியை பாகிஸ்தான் மாணவர்களும், அந்நாட்டினரும் கடைப்பிடிக்க தொடங்கினர். உயிரை காப்பாற்றிக்கொள் அனைவரும் இந்திய தேசியக் கொடியையும் வந்தே மாதம், பாரத் மாதா கி ஜே என்ற கோஷங்களையும் எழுப்பி வெளியே தப்பித்தனர். இது போன்ற செயல்களால் ரஷ்ய படைகள் அவர்கள் மீது தாக்குதலை நடத்துவதில்லை. இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரந்து விரிவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று சொல்லலாம். இந்தியர்களுக்கு மட்டுமின்றி தேசிய கொடியை கையில் எடுத்தாலே உலகம் முழுவதும் பின்வாங்குகின்றனர் என்பதற்கு பாகிஸ்தான் மாணவர்களே சாட்சி. ஒவ்வொருவரின் உயிரை இந்திய தேசியக் கொடி காப்பாற்றி வருகிறது. உலக நாடுகள் அனைத்து இந்தியர்கள் மீது மதிப்பு வைக்க காரணம் பிரதமர் மோடிதான் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மாணவர்களும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவிக்கின்றனர். உக்ரைனில் இருந்து மீட்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை மாணவர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் இந்தியா சிறப்பு விமானங்களை அனுப்பி இந்திய மாணவர்களை மீட்டு வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நபர், இந்த உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இந்திய தேசியக் கொடியை பயன்படுத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும். உக்ரைனில் இருந்து தப்பிக்க இந்திய தேசிய கொடியையும், பாரத் மாதா கி ஜே என்ற கோஷங்களை எடுக்க வேண்டியது கட்டாயம் என்றார்.
Source, Image Courtesy:Twiter