Kathir News
Begin typing your search above and press return to search.

சூதாட்டங்களை பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை!

சூதாட்டங்களை பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூதாட்டங்களை பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை!

KarthigaBy : Karthiga

  |  8 March 2024 7:56 AM GMT

சூதாட்டம் குறித்த விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை பிரபலங்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து சிசிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-


பொது சூதாட்டச் சட்டம் 1867 இன் கீழ் பந்தயம் மற்றும் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களிலும் இது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. எனினும் இணையவழி சூதாட்ட தளங்கள் விளையாட்டு என்ற பெயரிலும் நேரடியாகவும் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவதை தொடர்ந்து வருகின்ற. இவ்வகை விளம்பரங்கள் இளைஞர்களிடையே நிதி மற்றும் சமூக பொருளாதார ரீதியில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது.


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் நாட்டில் தடை செய்யப்பட்ட சட்டவிரோத செயல்களுக்கு விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து வகை ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் எல்லா விளம்பரங்களுக்கும் பொருந்தும். அதன்படி சட்டவிரோதமான இணைய வழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவது சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்கு சமமான பொறுப்பாகும் என பிரபலங்களுக்கு எச்சரிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து சூதாட்டம் குறித்த அனைத்து விளம்பரங்களும் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.


வழிகாட்டுதல்களை மீறுவது கண்டறியப்பட்டால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி விளம்பரத்தின் தயாரிப்பாளர்கள் ,விளம்பரதாரர்கள், வெளியீட்டாளர்கள் ,இடைத்தரகர்கள், சமூக ஊடக தளங்கள், விளம்பரப்படுத்துபவர்கள் மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News