Kathir News
Begin typing your search above and press return to search.

உலக வர்த்தக போரின் தாக்கத்தையும் தாண்டி சாதிக்கும் இந்தியா - ரூ. 9000 கோடிக்கான ஆர்டர்களை பெற்றது பெல் நிறுவனம்: விமர்சனங்களை தகர்க்கும் புள்ளி விவரம்!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Sep 2019 9:10 AM GMT

பெல் நிறுவனம் Bharat Electronics (BEL) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 சதவிகிதத்துக்கு மேலாக வருவாய் ஈட்டியுள்ளது. சமீபத்தில் Akash missile systems என்ற நிறுவனத்திடம் இருந்து சுமார் 5,357 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. இன்னும் மூன்று வருடங்களில் இந்த ஆர்டர் சப்பளை செய்யப்படும்.

2019-2020 ஆம் நிதியாண்டில் ரூ.9000 கோடிக்கான ஆர்டர்களை பெற்றுள்ளது. இதனால் வருட இலக்கான 15 ஆயிரம் கோடி ரூபாய் என்ற நிலையை அடைவதில் எந்த சிரமமும் இருக்காது.

உள்நாட்டு பாதுகாப்பு, கடலோர காவல்படை கண்காணிப்பு, குழாய் இணைப்பு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது பெல் நிறுவனம். மேலும் வேலூர் மாவட்டம், காட்பாடியில் இயங்கி வந்த தமிழ்நாடு வெடிபொருள் லிமிடெட் பிரிவை, தமிழக அரசு பெல் நிறுவனத்திடம் கொடுத்து புதுப்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட உள்ளது.

இதனை பெல் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து புதிய பிரிவை உண்டாக்கி, புதிய முதலீட்டுக்கு வழி செய்ய உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்ததாக எதிர் கட்சிகள் மாய தோற்றத்தை ஏற்ப்படுத்தி வரும் நிலையில், இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் வழக்கம் போல இலக்கை எட்டி வருகின்றன.

புதிய முதலீடுகளையும் பெற்று வருகின்றன. சீனா-அமெரிக்க வர்த்தக் போரின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்து வந்தாலும், அதனையும் சமாளித்து இந்த தனது ஸ்திர தன்மையை நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News