20 ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் புரோஜனம் இல்லை: தாலிபான் கல்வி அமைச்சரின் அடாவடி பேச்சு!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டு வரை பள்ளி, கல்லூகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எவ்வித பயனும் இல்லை என்று தாலிபான்களின் கல்வி அமைச்சர் கருத்து கூறியுள்ளார்.
By : Thangavelu
ஆப்கானிஸ்தானில் கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டு வரை பள்ளி, கல்லூகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எவ்வித பயனும் இல்லை என்று தாலிபான்களின் கல்வி அமைச்சர் கருத்து கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் தாலிபான்கள் எளிதாக ஆட்சியை பிடித்து விட்டனர். இதன் பின்னர் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி விட்டனர்.அதில் ஆண்கள் தாடியை குறைக்கவோ, அல்லது மழிக்கவோ கூடாது. பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்று பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தனர். இதனால் அந்நாட்டில் இருந்து மக்கள் லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், தாலிபான்களின் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக தாலிபான்கள் ஆட்சியில் இல்லை. அப்போதைய காலகட்டதத்ல் அமெரிக்க பாதுகாப்பில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் ஆட்சி செய்து வந்தனர்.
அந்த சமயத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலையில் படித்து பெற்ற பட்டத்தால் எவ்வித பயனும் இல்லை. இன்று உள்ள முதுகலைப் படிப்புகள், முனைவர் பட்டங்கள் அனைத்தும் மதராஸாவில் படிக்கும் மதரீதியிலான படிப்புகுளை விட மதிப்பு குறைவானவை. இதனால் தாலிபான்களின் தேசத்துக்குப் பயன்படுகின்ற மதிப்புகளை உணர்ந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பணியில் அமர்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar