Kathir News
Begin typing your search above and press return to search.

கிராமப்புற ரெயில் நிலையங்களில் இப்படி ஒரு சூப்பரான புதிய வசதியா? - தெற்கு ரெயில்வே அறிமுகம்!

கிராமப்புற ரெயில் நிலையங்களில் செல்போன் செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் புதிய வசதியை தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.

கிராமப்புற ரெயில் நிலையங்களில் இப்படி ஒரு சூப்பரான புதிய வசதியா? - தெற்கு ரெயில்வே அறிமுகம்!

KarthigaBy : Karthiga

  |  18 Jun 2023 11:00 AM GMT

ரெயில் பயணிகள் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெடடைப் பெற டிக்கெட் கவுண்டரில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதனால் பயணிகளின் நலன் கருதி எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில் யு.டி.எஸ் செல்போன் செயலி தெற்கு ரயில்வேயில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பயணிகள் தங்களது ஸ்மார்ட் ஃபோனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து முன்பதிவு இல்லாத டிக்கெட்டை எடுத்துக் கொள்ள முடியும். இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனாலும் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே இந்த செயலியை பயன்படுத்தி முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க முடியும். சில ரயில் நிலையங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தது .

இதை கிராமப்புறங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்த பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் ஹால்ட் நிலையங்களில் யு.டி.எஸ் செல்போன் செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹால்ட் நிலையம் என்பது கிராமப்புறத்தில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.

இதற்கு முன்பாக கிராமப்புற ரயில் நிலையங்களில் டிக்கெட்டை பயணிகளுக்கு முகவர்கள் நேரடியாக வழங்குவார்கள். தற்போது யு.டி.எஸ் செல்போன் செயலி மூலமாக பயணிகள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட், முன்பதிவு இல்லாத டிக்கெட் ஆகியவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News