Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சியில் இப்படி ஒரு துணிகர செயலா? ரயில்வே ஊழியர் வீட்டில் 70 பவுன் கொள்ளை - தமிழகத்தில் அதிகமாகும் கொள்ளைகள்

திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம் ரயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை

திருச்சியில் இப்படி ஒரு துணிகர செயலா? ரயில்வே ஊழியர் வீட்டில் 70 பவுன் கொள்ளை - தமிழகத்தில் அதிகமாகும் கொள்ளைகள்
X

JSK GopiBy : JSK Gopi

  |  6 Sep 2022 5:23 AM GMT

திருச்சியில் பட்டப்பகலில் ரயில்வே ஊழியர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி அசோக் நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மனைவி நாகலட்சுமி .இவர் ரெயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தனபால் இறந்துவிட்டார்.நாகலட்சுமி தனது தாயுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகள் திருமணமாகி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வருகிறார் அவ்வப்போது வீட்டிற்கு வந்து தாய் நாகலட்சுமியை பார்த்து செல்வது வழக்கம் .


இந்த நிலையில் நேற்று காலை கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக நாகலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு தெப்பக்குளம் பகுதிக்கு சென்றார் .பின்னர் பகல் 1.45 மணியளவில் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன .மேலும் அதில் இருந்த 70 பவுன் நகைகள் ஒரு லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டகண்ணீர் விட்டு கதறி அழுதார்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு வாலிபர்கள் அந்த வீட்டின் பக்கவாட்டு பகுதியில் உள்ள காலி இடத்தில் சிறுநீர் கழிப்பது போல் சென்று சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற காட்சி பதிவாகி இருந்தது. மேலும் 2 வாலிபர்கள் தெருக்களில் யாரும் வருகிறார்களா?என நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News