அத்தி வரதரை கொச்சைப்படுத்திய சர்ச்சை : வருத்தம் தெரிவித்தார் ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம்
அத்தி வரதரை கொச்சைப்படுத்திய சர்ச்சை : வருத்தம் தெரிவித்தார் ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம்
By : Kathir Webdesk
ஆன்மீக பேச்சாளரான திரு சுகி சிவம் அவர்கள் முருகப்பெருமானும் சுப்ரமணியரும் வேறு வேறு தெய்வங்கள் என்ற தோணியில் பேசியுள்ளார். இந்த உண்மைக்கு புறம்பான கருத்துக்கு தகுந்த ஆதாரங்களுடன் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
அந்த நிலையில், அத்தி வரதரை கொச்சைப்படுத்தி திரு சுகிசிவம் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனால் ஹிந்து மத உணர்வாளர்கள் பலரும் கொதிப்படைந்தனர். இணையத்தில் பலரும் சுகி சிவமை கண்டித்து பதிவிட்டு வந்தனர்.
சுகி சிவம் யாரின் தூண்டுதலின் பேரில் ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், மதுரை முத்தையா மன்றத்தில் சுகிசிவம் அவர்களை பேச அனுமதித்ததை கண்டித்து இந்து முன்னணி போராட்டம் செய்ய போவதாக அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து, இந்து முன்னணியினர் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, திரு சுகி சிவம் அவர்கள், தான் பேசயதில், ஒரு சிறு பகுதி மட்டும் வெட்டப்பட்டு பரப்பப்ட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் யாருடைய மனம் புண்பட்டிருந்தாலும் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். என்னை தனிமைப் படுத்த சதி நடக்கிறது; காவல்துறை, சட்ட உதவியுடன் சதிபுரிபவர்களைக் கண்டறிவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையில் முழு பேச்சையும் கேட்டால் இந்து மதத்தின் கர்ம யோகம் ஞான யோகம் பற்றி விளக்கி இந்து சமயத்திற்கு மதிப்பு சேர்த்து இருப்பது புரியவரும். என்றாலும் சொற்களால் காயப்பட்ட அனைவரிடமும் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.