Kathir News
Begin typing your search above and press return to search.

“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” - தினமும் இரவு 7.30 மணிக்கு!!

“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” - தினமும் இரவு 7.30 மணிக்கு!!

“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” - தினமும் இரவு 7.30 மணிக்கு!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Sept 2019 7:30 PM IST


சன் டிவி.யில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை மெட்டி ஒலி புகழ் திருமுருகன்தான் இயக்கி, நடித்து, தயாரித்து வருகிறார். கடந்த மே மாதம் 14, 15 தேதிகளில் ஒளிபரப்பான எபிசோடுகளில் ஆபாசமும், வக்கிரமும் எல்லை மீறி போனது. குறிப்பாக 15 நிமிட காட்சிகளில் கூட்டு கற்பழிப்பு போன்ற மிக மோசமான வசனங்களும் இடம் பெற்று இருந்தன.


இந்த தொடரில் வில்லியாக வரும் ரோஜா, தனது சொந்த சகோதரியையே கற்பழிப்பதற்காக பணம் கொடுத்து 4 பேரை அனுப்புவதும், அதுதொடர்பான காட்சிகளும், வசனங்களும்தான் எல்லை மீறி அருவருப்பை ஏற்படுத்தியது. அப்போது அவள் பேசும்போது, “நீங்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, உங்கள் இதயத்தில் இரக்கமோ பரிதாபமோ இருக்கக்கூடாது… அவள் எவ்வளவு கதறினாலும் பரிதாபமோ, தயவோ, கருணையோ இருக்கக்கூடாது” என்று வேறு கூறுகிறாள்.


கடந்த ஜூன் மாதம், 28-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், ரோஜாவை சீரழித்தவர்களின் பிறப்புறுப்பை எரித்துவிட, ராஜா திட்டம் தீட்டுகிறான்.


ஒவ்வொரு வீட்டிலும் இளம் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கும் சன் டி.வி-யின் பிரபலமான கல்யாண வீடு சீரியலில் தான் இந்த அசிங்கங்கள் அரங்கேறியுள்ளது.


இந்த ஆபாசம் தொடர்பாக பி.சி.சி.சி-யில்(Broadcasting Content Complaints Council) புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடரந்து, பி.சி.சி.சி கடந்த ஜூன் 27-ஆம் தேதி, சன் டிவிக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர், கடந்த மாதம்(ஆகஸ்ட்-23) அன்று பி.சி.சி.சி விசாரணை நடத்தியது. அதில் ஒழுங்குமுறை அமைப்பு விதித்த பல விதிகளை சன் டி.வி மீறியுள்ளதாக பி.சி.சி.சி உறுதிப்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து, சன் டி.வி-க்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பி.சி.சி.சி உத்தரவிட்டது. மேலும், கல்யாண வீடு சீரியல் ஒளிபரப்பப்படுவதற்கு 30 விநாடிகளுக்கு முன் மன்னிப்பு காட்சிகள் அடங்கிய கிளிப்புகள் ஒளிப்பரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.


இதனால் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 6 நாட்கள் இந்த மன்னிப்பு காட்சிகள் அடங்கிய காட்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்று பி.சி.சி.சி உத்தரவிட்டுள்ளது.


எனவே நாளை இரவு 7.30 மணிக்கு சன் டி.வி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வைபவம் தொடங்கும்.


சன் டிவிக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும், அதோடு மன்னிப்பு கேட்பதையும் இதுவரை தெரியாதவர்களும் இதைப் பார்த்து தெரிந்துக் கொள்வார்கள். எதற்காக இந்த நடவடிக்கை என்பதையும் ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்வான்.


இது மற்ற தொடலைக்காட்சி தொடர் இயக்குனர்கள், கதாசியர்கள், வசனகர்தாக்களுக்கு ஒரு பாடமாக அமையும்.


எதை வேண்டும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் காட்சிப்படுத்தலாம் என்கிற தற்போதைய நிலை இனி மாறும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News