Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவிலில் பணிகள் மேற்கொண்ட சூப்பர் ஹீரோக்கள்- வலைதள வைரல்!

ராமர் கோவிலில் ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போன்ற ஹீரோக்கள் தூய்மை பணி மேற்கொள்வது போன்ற காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ராமர் கோவிலில் பணிகள் மேற்கொண்ட சூப்பர் ஹீரோக்கள்- வலைதள வைரல்!

KarthigaBy : Karthiga

  |  22 Jan 2024 10:00 AM GMT

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி நகரமே மலர் அலங்காரங்களால் விழாக்கோலம் கொண்டது. பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்யோதி நகரம் மூழ்கியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கலையும் பாரம்பரியமும் கொண்ட இந்த பிரம்மாண்ட கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை பகல் 12:20 மணிக்கு சிறப்பாக நடைபெற்று முடிந்தது .சரயு நதியிலிருந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டன.


கோவில் கருவறையில் வைப்பதற்காக 51 அங்குள்ள உயரம் கொண்ட பாலராமர் சிலை மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகராஜ் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜ உடையில் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பாலராமர் சிலை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு மதியம் 12:20 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் பாலராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றது . ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் 7000 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அவர்களும் அயோத்திக்கு விரைந்துள்ளனர்.


ராமர் கோவில் சுத்தம் செய்யும் பணிகளில் ஹாலிவுட் பட சூப்பர் ஹீரோக்கள் ஈடுபடுவது போன்ற செயற்கை அறிவு சித்தரிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. அயர்ன் மேன், சூப்பர் மேன், பேட்மேன் வொண்டர் வுமன், ஸ்பைடர் மேன், ஹல்க் மற்றும் டெட்பூல் ஆகியோர் அடங்குவர் .படங்களில் தானோஸ் தி ஜோக்கர் மற்றும் லோகி போன்ற சில பிரபலமான காமிக் புத்தக வில்லன்களும் உள்ளனர். அவர்கள் கோவில் துப்புரவு பணிகள், விளக்கேற்றுதல் அர்ச்சர்களுக்கு உதவி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். இது பக்தர்கள் மற்றும் இணையவாசிகளின் இதயங்களை ஈர்த்துள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News