உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு! ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்! இன்று மாலை கைதாக வாய்ப்பு!!
உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கேவியட் மனு! ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்! இன்று மாலை கைதாக வாய்ப்பு!!
By : Kathir Webdesk
முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது.
இதையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ப.சிதம்பரம், வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முன்ஜாமீன் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை, அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.
இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எங்களது கருத்தை கேட்காமல் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது” என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
எனவே, ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் அப்பீல் மனு நிராகரிக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று மாலை ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.