#Breaking N.I.A அதிரடி.. கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் கைது.. !!
#Breaking N.I.A அதிரடி.. கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் கைது.. !!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், கடந்த 5-ந்தேதி சரக்கு விமானம் ஒன்றில் வந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் பார்சல் ஒன்று வந்திருந்தது. சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அதை பிரித்துப்பார்த்தபோது அதில் 30 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன.
தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டதால் அது குறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது. இதில் தூதரக முன்னாள் ஊழியரான சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலின் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் என்பது தெரிய வந்துள்ளது.
ஸ்வப்னா சுரேஷ், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கேரள தங்கக் கடத்தல் ஊழல் வெளிச்சத்திற்கு வந்து மூன்று நாட்களுக்குப் பின்னர், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (N.I.A) விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து, இன்று அவர் N.I.A அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
நாளை, கொச்சியில் உள்ள N.I.A அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது.