Kathir News
Begin typing your search above and press return to search.

வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாம்: புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்திய சுவிட்சர்லாந்து அரசு!

இந்த காலக்கட்டத்தில் உலகில் உள்ள அனைவரும் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு வகையிலான இயந்திரங்களை கண்டுப்பிடித்து உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறலாம்.

வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாம்: புதிய இயந்திரத்தை அறிமுகப்படுத்திய சுவிட்சர்லாந்து அரசு!
X

ThangaveluBy : Thangavelu

  |  8 Dec 2021 8:50 AM IST

இந்த காலக்கட்டத்தில் உலகில் உள்ள அனைவரும் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு வகையிலான இயந்திரங்களை கண்டுப்பிடித்து உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறலாம். ஆனால் தற்போது மனிதன் தன்னுடைய வாழ்க்கையை முடித்து கொள்வதற்கும் கூட ஒரு இயந்திரத்தை கண்டுப்பிடித்திருப்பது மனிதர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். ஆம் அது போன்ற ஒரு இயந்திர சுவிட்சர்லாந்தில் வலி ஏற்படாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக மிகவும் நவீன முறையிலான இயந்திரம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்திற்கு கூடுதல் ஆச்சரியம் இருக்கிறது. அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசே அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் கருணைக்கொலை செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வமான அனுமதி இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,300 பேர் கருணைக்கொலையால் இறந்துள்ளதாக புள்ள விரங்கள் கூறுகிறது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் மருத்துவர் டெத் என்று சொல்லபடும் கருணைக்கொலை ஆர்வலரும், மருத்துவருமான பிலிப் நிட்ச்சே என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான ஒரு நவீன முறையிலான இயந்திரத்தை கண்டுப்பிடித்துள்ளார். இதற்கு சார்கோ கேப்சூல் என்று அழைக்கப்படும் சவப்பெட்டி வடிவில் இந்த இயந்திரத்தை எடுத்து செல்லலாம். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்தால் அந்த நபர், இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ளலாம். பின்னர் ஒரு பட்டனை அழுத்தினாலே போதும் உயிர் தானாக பிரிந்துவிடும். எனவே இந்த இயந்திரத்துக்கு அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. மனிதன் உயிர்வாழ்வதற்கு மருந்துகள் கண்டுப்பிடிப்பதை வரவேற்பதற்கு ஒரு கூட்டம் இருந்தால், உயிர் பிரிவதற்கு இயந்திரத்தை கண்டுப்பிடிப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

Source: Daily Thanthi

Image Courtesy: Pipa News


Next Story
கதிர் தொகுப்பு
Trending News