Kathir News
Begin typing your search above and press return to search.

திரையிட்ட கல்லூரிகள்.! என்ன தான் நடக்கிறது ஆப்கானில் !

What is happening in Afghanistan ?

திரையிட்ட கல்லூரிகள்.! என்ன தான் நடக்கிறது ஆப்கானில் !
X

TamilVani BBy : TamilVani B

  |  7 Sept 2021 6:15 PM

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி பொறுப்பை கைப்பற்றியதும் அங்ககுள்ள மக்கள் மிகவும் அச்சப்பட்டனர். காரணம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானை ஆண்ட தாலிபான்கள் பெண்களுக்கு எதிரான மிக கடுமையான சட்டங்களை கொண்டுவந்தனர். இதனால் தற்போதும் அந்த நிலை ஏற்படும் என அவர்கள் எண்ணினர்.

ஆனால் தாலிபான்கள் கடந்த காலங்களில் இருந்தது போன்று இருக்காது என தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் தெரிவித்தது போல் நடந்து கொள்ளவில்லை என அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஆப்கானில் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் அங்கு மாணவர்களும் மாணவிகளும் பயில தனி தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி அவர்களுக்கு இடையே திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Source: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News