Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களை கால் தூசிக்கு கூட மதிக்காத தலிபான்கள் : கடுமையான இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தை வைத்து நசுக்கிப் பிழியும் பயங்கரவாதிகள்.!

Taliban ban female employees from entering Ministry of Women

பெண்களை கால் தூசிக்கு கூட மதிக்காத தலிபான்கள் : கடுமையான இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தை வைத்து நசுக்கிப் பிழியும் பயங்கரவாதிகள்.!
X

hindustantimes

MuruganandhamBy : Muruganandham

  |  17 Sep 2021 6:44 AM GMT

ஆப்கானிஸ்தானில் கடந்த 1995-2001ஆம் ஆண்டு வாக்கில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றது. அதற்குப் பிறகு தற்போது மீண்டும் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான உரிமைகள் மறுக்கப்பட்டதோ அதேநிலைதான் இந்த முறையும் நீடிக்கிறது. இதனால் தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

முஸ்லிம்களின் ஷாரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் என்பதால், பெண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளிேய வரஅனுமதிக்கப்படுவதில்லை. இந்த முறையும் ஷாரியத் சட்டப்படியே ஆட்சி நடக்கும் என தலிபான்கள் தெரிவித்துள்ளதால் பெண்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போது தலிபான்கள் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இஸ்லாமியச் சட்டப்படி பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தலிபான் ஆட்சியாளர்கள் வழங்குவார்கள். பெண்கள் பணியாற்றலாம். பெண்களுக்கு எதிராக பாகுபாடுகாட்டமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

இது படி நடப்பது போலத்தெரியவில்லை. தலிபான்கள் நடவடிக்கை பெண்கள் உரிமைக்கு மாறாகவே அமைந்துள்ளது. ஊடகத்துறையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஆண்களுடன் சேர்ந்து கல்வி கற்கவும், ஒரே வகுப்பறையில் அமரவும் தடைவிதிக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்கள் பாடம் நடத்தவும் தடை விதித்த தலிபான்கள், பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றவும் தடை விதித்துள்ளனர்.

இந்த சூழலில் மகளிர் நலத்துறை அமைச்சகத்தில் பெண்கள் பணியாற்றத் தடை விதித்தும் ஆண் ஊழியர்கள் மட்டுமே பணிக்குவர வேண்டும் எனவும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News