காபூல் மாநகராட்சியில் வேலை செய்ய பெண்களுக்கு தடை விதித்த தாலிபான் !
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சியில் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதனால் பெண் ஊழியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தாலிபான்களுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
By : Thangavelu
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கைகளில் ஆட்சி சென்றதால் அவர்கள் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், கடந்த 7ம் தேதி இடைக்கால அரசு நிறுவப்பட்டுள்ளது. அப்போது அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சி இருக்கும் என தாலிபான்கள் கூறினர்.
அதில் பெண்கள் வேலை செய்வதற்கு அனுமதி, கல்வி உரிமை மற்றும் பல்வேறு உரிமைகள் வழங்கப்படும் எனவும் கூறினர். ஆனால் அதற்கு எதிராக ஆட்சி அமைத்த பின்னர் மகளிர் நலத்துறை அமைச்சகம் கலைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஆப்கான் பெண்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தது மட்டுமின்றி சாலைகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டதை காணமுடியும்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மாநகராட்சியில் பெண் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதனால் பெண் ஊழியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பெண்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தாலிபான்களுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi