நார்வே தூதரகத்தை கைப்பற்றிய தாலிபான்கள்! குழந்தைகளின் புத்தகங்களை அழிக்க உத்தரவு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நார்வே நாட்டின் தூதரகத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். முதல் கட்டமாக அங்கு இருந்த ஒயின் பாட்டில்கள் மற்றும் குழந்தைகளின் புத்தகங்களை அழிக்க உத்தரவிட்டுள்ளனர்.
By : Thangavelu
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நார்வே நாட்டின் தூதரகத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். முதல் கட்டமாக அங்கு இருந்த ஒயின் பாட்டில்கள் மற்றும் குழந்தைகளின் புத்தகங்களை அழிக்க உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பிரதமர் மற்றும் துணைப் பிரதமர், அமைச்சர்கள் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
தாலிபான்கள் மிகவும் பழமைவாதத்தை கடைப்பிடிப்பவர்கள். இதனால் அவர்கள் இஸ்லாமியர்களின் பழங்கால முறையே நடைமுறைப்படுத்துவதே அவர்களின் நோக்கமாக உள்ளது. பெண் குழந்தைகள் கல்வி கற்க தடை, பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை உள்ளிட்டவைகளை அவர்களின் முக்கிய குறிக்கோளாகும். இதனால் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் முழுவதும் அதனை செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், காபூலில் உள்ள நார்வே நாட்டின் தூதரகத்தை தாலிபான்கள் நேற்று கைப்பற்றினர். அப்போது அங்கு இருந்த குழந்தைகளின் புத்தகங்கள் மற்றும் ஒயின் பாட்டில்களை அழித்தனர். ஏற்கனவே நார்வே நாட்டின் தூதரக அதிகாரிகள் வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Hindu Tamil