Kathir News
Begin typing your search above and press return to search.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானின் நிலை சீராகவும் சிறப்பாகவும் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது !

Russia Supports Afghanistan.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானின் நிலை சீராகவும் சிறப்பாகவும் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது !
X

G PradeepBy : G Pradeep

  |  17 Aug 2021 1:42 PM IST

மாஸ்கோ: அதிபர் அஷ்ரப் கனியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானின் நிலை சீராகவும் சிறப்பாகவும் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் டிமிட்ரி ஜிர்னோவ் வானொலி நேரடி ஒளிபரப்பில் பேசியதாவது: தலிபான் பிரிவுகள் தலைநகருக்குள் நுழைந்து, ஆப்கன் அரசையும் அமெரிக்கப் படைகளையும் நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டன. இதனால் அஷ்ரப் கனி தப்பித்துச் சென்றுவிட்டார். இது இழிவான செயல். அதிபர் அஷ்ரப் கனியின் ஆட்சியைவிட தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலைமை சிறப்பாக இருந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தலிபான்களின் கீழ் வந்த முதல் நாளிலேயே என்னாலும் இதைக் கூற முடியும். இனி, காபூலில் நிலைமை அமைதியாகிவிடும்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ரஷ்ய தூதரகம் தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷ்ய அதிகாரிகளை மீட்பது குறித்து தலிபான்களுடன் விரிவான பாதுகாப்புப் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். முந்தைய ஒப்பந்தங்களின்படி, ரஷ்ய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Image : News 18

Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News