பயங்கரவாதிகளுக்கு மன்னிப்பு கொடுத்து பாகிஸ்தான் மக்களாக ஏற்போம்! இம்ரான் கானின் பேட்டியால் உலக நாடுகள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் என்றாலே பயங்கரவாதிகளுக்கு பேர் போன நாடு என்று அனைவரும் அறிந்ததே. ஐநா சபையில் இந்தியா பலமுறை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான் மறுத்து வருகிறார்.
By : Thangavelu
பாகிஸ்தான் என்றாலே பயங்கரவாதிகளுக்கு பேர் போன நாடு என்று அனைவரும் அறிந்ததே. ஐநா சபையில் இந்தியா பலமுறை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான் மறுத்து வருகிறார். இருந்தபோதிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு துணை போவது வெட்ட வெளிச்சமாகிறது. இதனை மறுபடியும் நிரூபிக்கின்ற வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தேகிரீக்ஐ தாலிபான் இருந்து வருகிறது. இந்த அமைப்பு பாகிஸ்தானி தாலிபான் என்றும் சொல்லபட்டு வருகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், தாலிபான்கள் உதவியுடன் இயங்கிவரும் பாகிஸ்தானி தாலிபான் அமைப்பின் ஆதரவை இம்ரான் கான் அரசு வெளிப்படையாக கோரியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் இருக்கும் தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் இணக்கமாகவே போவதற்கு இம்ரான்கான் விரும்புகிறார். இதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவருகிறது.
மேலும், உள்நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத செயல்களை இம்ரான்கான் தூண்டி வருவதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளும் எழுகிறது. இதனிடையே சமீபத்தில் துருக்கி ஊடகத்திற்கு இம்ரான்கான் பாகிஸ்தானி தாலிபான் குறித்து பேட்டி அளித்துள்ளார்: பாகிஸ்தானி தாலிபான்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளோம். இது ஒரு சமாதான பேச்சுவார்த்தையும் அமையும் என்று வெளிப்படையாக ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தார்.
இந்த அமைப்பினர் பாகிஸ்தானில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்புடனே பாகிஸ்தான் அரசு சமாதானம் பேசியுள்ளது எப்படி பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தண்டிக்கும் என்ற கேள்வியை ஊடகம் எழுப்பியது. அதற்கு அவர் பேசும்போதும், எங்களுடைய அரசு மன்னித்து, சமாதான பேச்சுக்கு பின்னர் பயங்கரவாதிகளும் இனிமேல் சாதாரண குடிமக்களாக கருதப்படுவார்கள் என்று வெளிப்படையாக கூறினார்.
தற்போது இவர் பேட்டி கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar