Kathir News
Begin typing your search above and press return to search.

தாலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் !

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அந்நாட்டு அரசு படைக்கும் நடந்து வந்த போரில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

தாலிபான்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் !
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Aug 2021 4:15 AM GMT

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அந்நாட்டு அரசு படைக்கும் நடந்து வந்த போரில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் சென்றுவிட்டது என்ற செய்தியை அறிந்த உடன் உலக நாடுகள் அங்கு உள்ள தங்களின் தூதரங்களை காலி செய்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் மக்களிடம் ஒரு விதமான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டை விட்டு தப்பித்தால் போதும் என்று அருகாமையில் உள்ள நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில், தாலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. இதனிடையே அமெரிக்க சட்டப்படி தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையே, தாலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காக பயன்படுத்தியதால் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:வாட்ஸாப்ப்

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/18080457/2931405/tamil-news-Talibanlinked-Whats-App-account-frozen.vpf

Next Story
கதிர் தொகுப்பு
Trending News