காங்கிரஸ் தலைவருக்காக பாராளுமன்றத்தில் இந்தியில் கோஷம் போட்ட தமிழக எம்பிக்கள்.!
காங்கிரஸ் தலைவருக்காக பாராளுமன்றத்தில் இந்தியில் கோஷம் போட்ட தமிழக எம்பிக்கள்.!
By : Kathir Webdesk
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சோனியாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எஸ்.பி.ஜி எனப்படும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
ராஜீவ் கொலையாளிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளும், தலைவர்களும், கடந்த பல ஆண்டுகளாக ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். மேலும் விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்பதால், அவர்களால் மற்றவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சோனியாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு மாற்றியமைக்கப்பட்டது. தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு மாற்றத்தை அரசியலாக்கி, பாராளுமன்றத்தில் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியான திமுகவும் கூச்சல் குழப்பம் செய்து வருகின்றனர். வெளிநடப்பும் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்பிய தமிழக எம்பிக்கள் இந்தியில், கோஷம் எழுப்பி தமிழர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். அதாவது “ஜவாப் தோ ஜவாப் தோ பிரதான் மந்திரி ஜவாப் தோ” என்று இந்தியில் கோஷமிட்டு தங்களின் இந்தி மீதான பாசத்தை பாராளுமன்றம் மூலமாக உலகிற்கு உணர்த்தினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் மற்றும் ஜோதிமணி ஆகியோர்தான் இதில் முக்கியமானவர்கள்.
இவர்கள்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய மோடி அரசு இந்தியைத் திணிக்கிறது என்று நீலிக் கண்ணீர் வடித்தார்கள் என்பது துணுக்கு செய்தி.