Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர்கள் சங்கம் சரமாரி கேள்விக்கணைகள்!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர்கள் சங்கம் சரமாரி கேள்விக்கணைகளை தொகுத்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர்கள் சங்கம் சரமாரி கேள்விக்கணைகள்!
X

KarthigaBy : Karthiga

  |  30 May 2024 3:11 PM GMT

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்பு இடங்களை தனியாருக்கு நிகராக ஏன் அதிகரிக்கவில்லை என முதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. தமிழக அரசு சார்பில் சென்னை , மதுரை என தலா ஒரு மருந்தியல் கல்லூரி ஆறு செவிலியர் கல்லூரிகள் உட்பட துணை மருத்துவ படிப்புகளுக்கு 14 கல்லூரிகள் மட்டுமே செயல்படுகின்றன .இவற்றில் 608 இடங்கள் உள்ளன. அதே நேரம் 391 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 21 ஆயிரத்து 190 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன .

தனியார் கல்லூரிகளில் துணை மருத்துவம் படிக்க 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது .இதனால் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனியாருக்கு நிகராக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏன் துணை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவில்லை என கேள்வி எழுப்பி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டாக்டர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதம் துணை மருத்துவ lபடிப்புகளான பி.ஃபார்ம் , பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கல்லூரிகளை தனியார்களே நடத்துகின்றன.துணை மருத்துவ படிப்புகளில் மொத்தமுள்ள இடங்களில் 97 சதவீதம் தனியாரிடம் உள்ளது.

தனியார் கல்லூரிகள் அதிக அளவில் துவங்க அனுமதித்த நிலையில் அரசு சார்பில் கல்லூரிகள் துவக்கவோ இடங்களை அதிகரிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை .தனியார் கல்லூரிகளில் 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 60 ஆண்டுகளாக ஒரு துணை மருத்துவ படிப்பு கூட புதிதாக துவக்கப்படாமல் உள்ளது. ஏழை மாணவர்கள் நலன் கருதி துணை மருத்துவ படிப்புகளை அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் துவங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.


SOURCE :NEWSPAPER

Next Story
கதிர் தொகுப்பு
Trending News