Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு மக்கள் தொகையை ஒப்பிடும்போது ஒரு சதவீதம் கூட வக்கீல்கள் இல்லை - அதிர்ச்சி தரும் தகவல்

தமிழ்நாட்டின் மக்கள் தொகையை ஒப்பிடும் போது ஒரு சதவீதம் கூட வக்கீல்கள் இல்லை என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் கூறினார்.

தமிழ்நாடு மக்கள் தொகையை ஒப்பிடும்போது ஒரு சதவீதம் கூட வக்கீல்கள் இல்லை - அதிர்ச்சி தரும் தகவல்

KarthigaBy : Karthiga

  |  13 Oct 2022 5:45 AM GMT

தமிழ்நாட்டில் புதிய வக்கீல்கள் வரவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை நடந்த புதிய வக்கீல்கள் பதவி ஏற்பு விழா இப்போது ஆண்டுக்கு நான்கு முறை நடக்கிறது. கல்லூரிக்கு போகாமல் அண்டை மாநிலங்களில் பலர் சட்டப்படிப்பை வாங்கி வருகின்றனர் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ். அமல்ராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது. முந்தைய காலத்தை ஒப்பிடும்போது புதிதாக வக்கீல்களாக பதிவு செய்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மைதான். 1961 ஆம் ஆண்டு மூன்று பெண்கள் உட்பட நான் 246 வக்கீல்கள் தான் பதிவு செய்தனர். 1983 ஆம் ஆண்டு தான் வக்கீல் களின் பதிவு எண்ணிக்கை மூன்று இலக்கத்தை கடந்தது. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதித்துறை வரலாற்றில் 3143 பெண் வேட்கள் புதிதாக பதிவு செய்தனர். தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மொத்தம் 22 ஆயிரத்து 966 பெண் வக்கீல்கள், 91 ஆயிரத்து 618 ஆண் வக்கீல்கள் என்று தற்போது ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 584 வக்கீல்கள் உள்ளனர்.


ஐந்தாண்டுக்கு ஒருமுறை எத்தனை வழக்குகளில் ஆஜரானோம் என்ற விவரத்தை ஒவ்வொரு வக்கீல்களும் பார் கவுன்சிலில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தாக்கல் செய்த அறிக்கையின்படி 85000 பேர் தான் முழுநேர வக்கீலாக சேவை செய்கின்றனர். மீதமுள்ளவர்களில் பலர் வக்கீல் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். பலர் பெரிய கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகராக சென்று விட்டனர். தமிழ்நாட்டின் ஜனத்தொகை கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்குப்படி ஏழு கோடியே 21 லட்சத்து 47,30 பேர் என்று உள்ளது தற்போது 10 கோடி பேர் தமிழ்நாட்டில் தாராளமாக இருப்பார்கள் ஆனால் இவர்களுக்கு சட்ட சேவை வழங்க தமிழ்நாட்டில் வரும் 85,000 வக்கீல்கள் மட்டுமே உள்ளனர். அதாவது மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவீதம் கூட வக்கீல்கள் இல்லை. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் ஏற்படும் தமிழ்நாட்டில் மிக குறைந்த விலையில் உள்ளனர் ஐந்து சதவீதம் வக்கீல்கள் உள்ளனர்.


அதை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிக குறைந்த வக்கீல்களே உள்ளனர். தமிழ்நாட்டில் முன்பை விட சட்ட கல்லூரியின் எண்ணிக்கை பெருகிவிட்டது. 15 அரசு சட்டக் கல்லூரிகள், இரண்டு தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. இது போக 13 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் சட்டப் படிப்பை நடத்துகின்றன. அதனால் சட்டப்படிப்பை முடித்து பதிவு செய்யும் வக்கீல்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News