பா.ஜ.க. எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் கோயிலை திறக்க உத்தரவிட்ட தி.மு.க. அரசு!
பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயிலை திறக்க திமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
By : Thangavelu
பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயிலை திறக்க திமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரசு உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது, அரசியல் கூட்டங்கள் நடப்பது, சமுதாய கூட்டங்கள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கோயில்கள் திறக்கப்பட்டிருந்தது. இதனிடையே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்வில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். 10 நாட்களுக்குள் கோயில்களை திறக்காவிட்டால் அனைத்து கோயில்களிலும் பாஜக சார்பில் நுழைந்து சாமி தரிசனம் செய்வோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கைக்கு சில நாட்களிலேயே கோயில்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Puthiyathalaimurai