உத்திர பிரதேசத்தில் வேலை, கல்வி தருவதாக ஏமாற்றி மதம் மாற்ற முயற்சி செய்த தமிழக கிறுஸ்தவ மிஷனரிகள்!
உத்திர பிரதேசத்தில் வேலை, கல்வி தருவதாக ஏமாற்றி மதம் மாற்ற முயற்சி செய்த தமிழக கிறுஸ்தவ மிஷனரிகள்!

உத்திர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் மூளைச்சலவை செய்து மதம் மாற்ற முயன்ற ஐந்து பேர் மீது புதிதாக கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஜத், அஜய் மற்றும் சிரிஷ் குப்தா என்பவர்களோடு தமிழ் நாட்டைச் சேர்ந்த டேவிட் மற்றும் ஜகன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாஜகான்பூரைச் சேர்ந்த ராம் லக்கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விகாஸ் நகர் காலனி என்ற பகுதியில் ஒரு வீட்டில் ஜெபக் கூட்டம் நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறும் ராம் லக்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் ஜெபம் செய்து கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஜெபக் கூட்டம் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான சிரிஷ் குப்தாவின் வீட்டில் ஜெபக் கூட்டம் நடந்துள்ளது. அங்கு நல்ல வேலை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி உள்ளிட்டவை ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறி சிலரை கிறிஸ்தவ மதத்தைத் தழுவுமாறு வற்புறுத்தியதாக புகார் அளித்த ராம் லக்கான் கூறியுள்ளார்.
With Inputs from IndianExpress