Kathir News
Begin typing your search above and press return to search.

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகள் - தமிழ்நாடு இரண்டாவது இடம்

தேசத்திற்கு எதிரான குற்ற வழக்குகள் பதிந்ததில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகள் - தமிழ்நாடு இரண்டாவது இடம்
X

KarthigaBy : Karthiga

  |  2 Sep 2022 6:00 AM GMT

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிந்ததில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் 'இந்தியாவில் குற்றங்கள் 2001' என்ற புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு தேசத்துக்கு எதிரான குற்றச் செயல்களுக்காக சுமார் 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக 14 வழக்குகள் பதிவாகி உள்ளன .இது கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைவிட குறைவாகும்.

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில் தேசத்துரோக வழக்குகள் அரசாங்க ரகசிய சட்டவழக்குகள்,சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட வழக்குகள், பொதுச்சொத்து சேதம் விளைவித்த வழக்குகள் ஆகியவை அடங்கும்.

தேசத்திற்கு எதிரான குற்ற வழக்குகளில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 654 வழக்குகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அசாம் ,காஷ்மீர் மேற்கு வங்காளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்குகள்தான் அதிகம்.அத்தகைய 4 ஆயிரத்து 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசத்துரோக வழக்குகள் 76-ம்,'உபா' சட்ட வழக்குகள் 814-ம்,அரசாங்க ரகசிய சட்டவழக்குகள் 55-ம் பதிவாகியுள்ளன. அதிகமான தேசத்துரோக வழக்குகள் ஆந்திராவிலும் அதிகமான'உபா' சட்ட வழக்குகள் மணிப்பூரிலும்பதிவு செய்யப்பட்டுள்ளன.இது போக முந்தைய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 8600 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News