நீட் தேர்வை எதிர்த்து அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரியை பூசிய தமிழக மாணவர்கள்!
நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
By : Karthiga
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதம்,யுனானி ஓமியோபதி ஆகியவற்றில் இளநிலை படிப்புகளுக்கும் கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இளநிலை குறிப்புகளுக்கும் ராணுவ நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கும் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் . அவ்வாறு தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மேற்சொன்ன மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2023 - 24 ஆம் கல்வியாண்டு மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுத நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகள் , 9 இலட்சத்து 2,930 மாணவிகள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87,445 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 47,583 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மாதம் ஏழாம் தேதி நாடு முழுவதும் 499 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் உடன் நடந்து முடிந்தது.
இந்த தேர்வை விண்ணப்பித்தவர்களில் ஏராளமானோர் எழுதினார்கள். தேர்வு நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் மருத்துவ படிப்பு கனவோடு மாணவர்கள் பலரும் அவர்களின் பெற்றோரும் காத்திருந்தனர் . இந்த நிலையில் நீட் நுழைவு தேர்வு தேர்வு முடிவை தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை நேற்று இரவு வெளியிட்டு இருக்கிறது. தேர்வு எழுத விண்ணப்பித்த 20 லட்சத்து 87,445 பேரில் 20 லட்சத்துக்கு 38,596 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள்.
இவர்களில் ஆறு லட்சத்து 55 ஆயிரத்து 599 மாணவிகள் 4 லட்சத்து 90,374 மாணவர்கள் மூன்று திருநங்கைகள் என மொத்தம் 11,45,978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 56.21 ஆகும். கடந்த ஆண்டு 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதியதில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 56.27 ஆகும். இதன்படி பார்க்கையில் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்து இருப்பது தெரிய வருகிறது. நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் நேற்று தேர்வு முடிவு வெளியானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன் ஆந்திராவைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் பகிர்ந்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 பேர் பட்டியலில் ஜே பிரபஞ்சன், கவுஸ் ஸ்டவ் பவுரி, சூர்யா சித்தார்த், எஸ்.வருண் சாமுவேல், ஹர்ஷித், ஜேக்கப் பிவின் ஆகிய ஆறு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.