சிறுத்தைகளை சம்பவம் செய்த காவிகள்.. என்ன விஷயம் தெரியுமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்பே கொடியை ஏற்றி கெத்து காட்டிய பா.ஜ.க-வினர்.
By : Bharathi Latha
தமிழகத்தில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு இடையிலான மோதல்கள் ஆங்காங்கே அதிகரித்து இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் கருத்தை எதிர்த்து பாஜக கருத்து சொல்வது, பிரதமர் மற்றும் பாஜகவினரை எதிர்த்து திருமாவளவன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கருத்து சொல்வதும் தொடர்ந்து நடைபெற்று வரத்தான் செய்கிறது. அந்த வகையில் பாஜகவை எதிர்த்து சவால் விட்ட வி.சி.கவை செயலிழக்கச் செய்த தர்மபுரி பாஜகவினர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்தில் முடிந்தால் எங்கள் முன்பு, "பாஜக கொடியை முடிந்தால் ஏற்றிப் பாருங்கள், வேற மாதிரி நடக்கும்" என விசிக தகராறில் ஈடுபட்டு இருந்தார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்பே பாஜக கொடிய ஏற்ற வேண்டும் என்று முன்பில் தொண்டர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். தான் யார் என்பதை காட்ட வைக்க வேண்டும்? என்று நோக்கத்தில் இது அமைந்திருந்தது. கடைசியில் பாஜக கொடியை ஏற்றியே தீர்வோம் என எதிர்ப்பையும் மீறி பாஜக தொண்டர்கள் ஆதரவுடன் அங்கு கொடி ஏற்றப்பட்டது.
இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அவர்களும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த ஒரு சம்பவம் குறித்து பதிவிட்டு இருந்தார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "தர்மபுரியில் அடுத்த சம்பவம். தர்மபுரி காரிமங்கலத்தில் "பா.ஜ.க கொடியை முடிந்தால் ஏற்றிப் பாருங்கள்!" என உருமிய சிறுத்தைகள் முன்பே கொடியை ஏற்றி கெத்து காட்டிய பா.ஜ.க-வினர். வேறு வழியின்றி பொட்டிப்பாம்பாய் அடங்கி தப்பித்து வீடு போய் சேர்ந்தனர் சீட்டாஸ். தேவையா இந்த அவமானம்?" என்று பதிவிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Twitter