Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் ஜவுளி பூங்காவுக்கு விருதுநகர் மாவட்டம் தேர்வு!
தமிழகத்தில் ஜவுளி பூங்காவுக்கு விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
By : Karthiga
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மித்ரா ஜவுளி பூங்காவுக்காக தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தென் தமிழ்நாட்டில் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு இது பெரும் ஊக்கமாக அமையும். விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 52 ஏக்கர் சிப்காட் நிலம் உள்ளது. அங்கு இந்த திட்டத்தை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story