தாசில்தாரை உயிருடன் எரித்த சம்பவத்தில் 3 பேர் பலி ! தீவைத்துக் கொளுத்திய விவசாயியும் மரணம்!!
தாசில்தாரை உயிருடன் எரித்த சம்பவத்தில் 3 பேர் பலி ! தீவைத்துக் கொளுத்திய விவசாயியும் மரணம்!!
By : Kathir Webdesk
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அப்துல்லா பூர்மேட் பகுதியில் தாசில்தாராகப் பணியாற்றி வந்த விஜயா ரெட்டியை விவசாயி ஒருவர் கோபவெறியில் தீவைத்துக் கொளுத்தினார்.
இந்த தீயில் தாசில்தார் சம்ப வத்தன்றே உயிரிழக்க, தீக்காயம் அடைந்த விவசாயி சுரேஷுக்கு இதுநாள் வரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பயனளிக்காமல் நேற்று அவரும் உயிரிழந்தார்.
தாசில்தார் அலுவலகத்தில் பணி யாற்றிக் கொண்டிருந்த தாசில்தார் விஜயா ரெட்டியை அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் கடந்த 4ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொலை செய்தார்.
15 நாட்களாகத் தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்த விவசாயி சுரேஷ், விவசாய நிலம் ஒன்றை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி வருவாய் துறையினர் பட்டா புத்தகம் வழங்கி யது பற்றி தாசில்தாரிடம் முறை யிட்டார்.
சம்பவம் நடந்த அன்று மதியம் தாசில்தாருடன் அவருடைய அறையில் பேசிக்கொண்டிருந்த சுரேஷ் திடீரென்று தாசில்தார் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்துக்கொலை செய்தார்.
சம்பவத்தில் சுரேஷ் 60 சதவிகித தீக்காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டார்.
தன்னுடைய நிலத்தை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி பட்டா புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் தனக்கு நீதி கிடைக்க உதவவேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வேண்டி கேட்டுக்கொண்டேன். ஆனால் தாசில்தாரிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை.
எனவே தயாராக திட்டம்போட்டு எடுத்துச்சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்து எரித்துக் கொலைசெய்தேன் என்று சுரேஷ் கூறியதாக போலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். ஏற்கெனவே தாசில்தாரைக் காப்பாற்ற முயன்ற அவரது கார் ஓட்டுநரும் தீக்காயம் அடைந்து நேற்று முன்தினம் உயிரிழந்தார்.