Kathir News
Begin typing your search above and press return to search.

அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரி விலக்கு - நாளை முதல் அமல்!

அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரி விலக்கு - நாளை முதல் அமல்!
X

KarthigaBy : Karthiga

  |  1 April 2023 12:30 AM GMT

நமது நாட்டில் அரியவகை நோய்களுக்கான மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இப்படி இறக்குமதி செய்யப்படுகிற மருந்துகளுக்கு 10 சதவீத அடிப்படை சுங்கவரி விதிக்கப்படுகிறது . அதே நேரத்தில் 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி ' என்ற தசைநார் சிதைவு நோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையிலான புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தாக உள்ள 'பெம்ப்ராலி ஜுமாபப்' என்ற மருந்துக்கும் சுங்கவரி விலக்கு தரப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பிற அறிய வகை நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கும் சுங்கவரி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. அதை பரிசீலித்த மத்திய அரசு அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளுக்கு அடிப்படை சொந்த வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. அரியவகை நோய்களுக்கான தேசிய கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கும் இந்த வரிவிலக்கு கிடைக்கிறது. இந்த சுங்கவரி விலக்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News