Kathir News
Begin typing your search above and press return to search.

ஆசிரியர் தகுதித் தாள் -2 தேர்வு முடிவு வெளியீடு - இரண்டரை லட்சம் பேர் எழுதிய தேர்வில் 6 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி

2 லட்சத்து 54,224 பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஆசிரியர் தகுதித் தாள் -2 தேர்வு முடிவு வெளியீடு - இரண்டரை லட்சம் பேர் எழுதிய தேர்வில் 6 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி

KarthigaBy : Karthiga

  |  30 March 2023 11:15 AM GMT

ஆசிரியர் தேர்வு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-1 தேர்வையும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது .இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.


தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 533 பேரில் 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதாவது 14 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தாள் இரண்டு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி வந்தால் 15ஆம் தேதி வரை கணினி வாயிலாக நடத்தப்பட்டது. இந்த தெருவை எழுதுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 54,224 பேர் மட்டுமே எழுதி இருந்தனர்.


இந்த தேர்வில் தேர்ச்சி பெற பொது பிரிவினர் 60 சதவீதமும் மற்ற பிரிவினர் 55 சதவீதமும் மதிப்பெண் எடுக்க வேண்டும் . இந்த நிலையில் தேர்வுக்கான இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் கணினி வழி தேர்வு மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவு நேற்று முன் தினம் இரவு வெளியிடப்பட்டது .இந்த தேர்வில் 15 ஆயிரத்து 430 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதியவர்களில் வெறும் ஆறு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். இது சொற்ப அளவிலான தேர்ச்சி என்று பேசப்பட்டாலும் இதற்கு முந்திய ஆண்டுகளின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது சற்று அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வருகிறது. இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டில் 3.63 சதவீதம் பேரும் 2019 ஆம் ஆண்டில் 0.8 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News