Kathir News
Begin typing your search above and press return to search.

வருங்கால தொழில்நுட்பத்தை கையில் எடுத்து செயல்படும் 'கேரி போர்' நிறுவனம் !

துபாய் தற்பொழுது கேஷியர் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையிலான சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டு உள்ளது.

வருங்கால தொழில்நுட்பத்தை கையில் எடுத்து செயல்படும் கேரி போர் நிறுவனம் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 Sep 2021 1:48 PM GMT

வருங்காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் ஒரு சூழ்நிலையில் அதற்கு ஏற்றவாறு நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்பொழுது, ஐக்கிய அரபு எமிரேட்சில் அமைந்துள்ள துபாய் நகரின் மத்திய கிழக்கு பகுதியில் கேஷியர் இல்லாத முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் 'கேரி போர்' என்ற நிறுவனத்தில் சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. இதில் சூப்பர் மார்க்கெட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு கேரிபோர் மொபைல் ஆப் இருப்பவர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும்.


அங்குக் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த சூப்பர் மார்க்கெட் முழுவதும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள், சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு கடையின் வாயிலுக்கு வந்ததும், அவர்களுடைய மொபைல் போனுக்கு அவர்கள் எடுத்துள்ள பொருட்களுக்கான பில் வந்து விடும். பில் தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். எனவே இதற்காக நீங்கள் கையில் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.


எதிர்காலத்தில் இதுபோன்ற கேஷியர், பணியாளர்கள் இல்லாத கடைகள் மக்களின் வரவேற்பை பெறும் என்றும் கேரி போர் நிறுவன தலைமை செயல் அதிகாரி(CEO) ஹனிஸ் வெய்ஸ் கூறுகிறார். ஏற்கனவே இதுபோன்ற ஒரு கடையை அமேசான் நிறுவனம் 2018ல் அமெரிக்காவில் திறந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Input & image courtesy:Siasat

Next Story
கதிர் தொகுப்பு
Trending News