சீத்தாவரத்தில் சிதிலமடைந்த கோவில்: பக்தர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
சீத்தாவரத்தில் பிரபலமடைந்த கோவில்கள், பக்தர்களின் கோரிக்கை என்ன?
By : Bharathi Latha
உத்திரமேரூர் சீத்தாவரத்தில், பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலை சீரமைக்க பக்தர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை விடுத்துள்ளார்கள். உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது சீத்தாவரம் என்ற சிறிய கிராமம் இக்கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலாகும் இருந்து வருகிறது.
இந்தக் கோவிலில் முறையாக பராமரிப்பு இல்லாததால் பல ஆண்டுகளுக்குமுன் கோவிலின் முன்பகுதியில் மண்டபம் இடிந்து விழுந்த தற்போது உற்சவர் சிலை உள்ள இடம் மட்டுமே மிஞ்சுகிறது. மேலும் இந்தக் காலகட்டமும் அடுத்தடுத்து வரும் மழைக்காலங்களில் இடிந்து விழக் கூடும் என்ற கவலையில் பக்தர்கள் உள்ளார்கள் எனவே இதுகுறித்து பக்தர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிலின் நிகழ்வு குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை, இக்கோவிலில், இரண்டு கால பூஜைகள் நடந்தன. ஒரு கால பூஜை கூட இல்லாமல் கட்டிடம் மிகவும் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது மேலும் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பல பகுதிகள் இடிந்து போனது மேலும் மண்டபத்தில் கருங்கற்கள் நாளடைவில் காணாமல் போயிருந்த நந்தி பீடம், பலிபீடம், தட்சிணாமூர்த்தி சிலைகள், சுவாமி சிலைகள் போன்றவைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
Input & Image courtesy:Dinamalar news