இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலம்-மீட்கப்படுமா?
கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் உள்ள கல்யாண மண்டபத்தை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து நிலத்தை மீட்க வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
By : Shiva
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இஸ்லாமியர்கள் மண்டபம் கட்டி உள்ளதால் அதனை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வடக்குறுக்கியில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் குறித்த தகவல்கள் துவரங்குறிச்சி 1864ஆம் ஆண்டு கிராம இனாம் பதிவேட்டில் 10 ஆண்டுகள் பழமையான வடகுறிச்சி விநாயகருக்கு என்றும், 1966ஆம் ஆண்டு பதிவேட்டில் வடக்குறிச்சி விநாயகர் கோவில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரத்தை ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த கோவில் நிலத்தில் முஸ்லிம்கள் கல்யாண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டி ஆக்கிரமித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் உள்ள கல்யாண மண்டபத்தை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து நிலத்தை மீட்க வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் தானாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
Source : Twitter
Image courtesy : Hindu Tamil